முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு தலைமை செயலக சங்க தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவராக பீட்டர் அந்தோணிசாமி பதவிக்காலம் முடிவடைந்தது. . இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் தேதி சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.இதில் 4 முனைப்போட்டி நிலவியது. வின்னர், டீம், பிரண்ட்ஸ், பில்லர் என்று 4 குழுக்கள் போட்டியிட்டன. தலைவர் பதவிக்கு பீட்டர் அந்தோணிசாமி (வின்னர்), கணேசன் (டீம்), மாசிலாமணி (பிரண்ட்ஸ்), வெங்கடேச பிரசாத் (பில்லர்) ஆகியோர் போட்டியிட்டனர்.19-ந் தேதி நள்ளிரவில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஜெ.கணேசன் தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கணேசன் இரண்டாம் முறையாக தலைவர் பதவிக்கு வந்துள்ளார். அவர் ஆயிரத்து 331 ஓட்டுகளைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பீட்டர் அந்தோணிசாமி ஆயிரத்து11 ஓட்டுகளும், வெங்கடேச பிரசாத் 544 ஓட்டுகளும், மாசிலாமணி 188 ஓட்டுகளும் வாங்கினர்.அதுபோல் செயலாளர் பதவிக்கு சீனிவாசன் (வின்னர்), கு.வெங்கடேசன் (டீம்), அன்பழகன் (பிரண்ட்ஸ்), சுரேஷ்குமார் (பில்லர்) போட்டியிட்டனர். டீம் அணியைச் சேந்த வெங்கடேசன் ஆயிரத்து 373 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார்.டீம் அணியைச் சேர்ந்த ஞா.மோகனவள்ளி இணைச் செயலாளர் (பொது), ஹரிசங்கர் இணை செயலாளர் (விளையாட்டு மற்றும் பண்பாடு) ஆகியோரும், பொருளாளராக பொ.மகேந்திரனும் வெற்றி பெற்றனர். இந்தத் தேர்தலில் டீம் அணியைச் சேர்ந்தவர்களே இந்தப் பதவிகளைப் பிடித்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து