முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிங்கா வசூல் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: வேந்தர் பிலிம்ஸ்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - ரஜினி நடித்த லிங்கா திரைப்பட வசூல் பற்றி தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேந்தர் பிலிம்ஸ் சிவா அறிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த இரண்டு நாட்களாக லிங்கா திரைப்பட வசூல் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. லிங்கா வெளியான சமயத்தில் அரையாண்டு நடப்பதாலும் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு முதன் முதலாக 600 திரையரங்குகளில் வெளியிட்டதால் எதிர்ப்பார்த்ததை விட வசூல் சற்று குறைந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மக்கள் குடும்பம் குடும்பமாக வர தொடங்கி இருக்கிறார்கள். விநியோகஸ்தர்களுக்கு லாபம் தரும் படமாக லிங்கா நிச்சயம் இருக்கும். லிங்கா படம் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து