முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் இன்று 2000 பெண்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை - ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி மதுரையில் இன்று மாலை 2 ஆயிரம் பெண்கள் அக்னிச்சட்டி எடுத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இதில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் கலந்து கொள்கிறார்கள்.

அதிமுக பொதுச் செயலாளர் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர வேண்டி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் 2 ஆயிரம் பெண்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை 4 மணியளவில் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ தலைமை வகிக்கிறார். அம்மா பேரவை மாநில செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் முன்னிலை வகிக்கிறார். இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இது குறித்து மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கழக நிரந்தர பொதுச் செயலாளர் இதய தெய்வம் புரட்சித்தலைவி மக்களின் முதல்வர் அம்மா அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சங்கடங்கள் விலகி மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக அரியணையில் அமர்ந்து தமிழகத்திற்கு நல்லாட்சி வழங்கிட வேண்டி மதுரை தெப்பக்குளம் மேற்கில் உள்ள அருள்மிகு நாக கன்னியம்மன் திருக்கோயிலில்இருந்து தொடங்கி 10 நாட்கள் விரதமிருந்து அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு 2000 பெண்கள் அக்னிச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை 4 மணியளவில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமை வகிக்கிறார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலை வகிக்கிறார். இதில் மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், துணை மேயர், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மண்டலம், நிலைக்குழு தலைவர்கள், பகுதி, தொகுதி, பாகம், வட்ட கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம்,வழக்கறிஞர் பிரிவு, விவசாய பிரிவு, சிறுபான்மை பிரிவு,மீனவரணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனரணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கழகத்தின் செயல்வீரர்,வீராங்கனைகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து