முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வாடிகன் நகரம் விழாகோலம்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

வாடிகன் நகரம் - உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் 5 நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. இதற்காக வாடிகன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

 மக்கள் அனைவரும் தேவாலயங்களை அலங்கரிப்பதில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.கத்தோலிக்க மற்றும் ரோமன் கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நகரமாக கருதப்படும் இத்தாலியில் உள்ள வாடிகன் நகரமே மின்விளக்கு அலங்காரங்களால் ஜொலித்து கொண்டிருக்கிறது.உலகம் முழுவதும் மக்களிடையே அன்பும் நம்பிக்கையும் கருணையும் நிரம்பி வழிய வேண்டும். அதன்மூலம் இவ்வுலகில் அமைதி ஒளி நிரம்பியதாக காணப்பட வேண்டும் என்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வாடிகன் நகரில் செய்தி வெளியிட்டார்.இன்னும் 5 நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால், வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, தேவாலயத்தை அழகுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேவாலயத்தில் 25 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு, அதற்கு மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.தேவாயலத்தின் முன் நிறுத்தப்பட்டு உள்ள கிறிஸ்துமஸ் மரத்தின் உயரத்தை போல, அனைத்து மக்களின் இதயங்களும் உயர வேண்டும். ஒவ்வொருவரும் ஜாதி, மதங்களை கடந்து, சகோதரத்துவத்துடன் நட்பை அடிப்படையாக வைத்து நெருக்கமாக பழக வேண்டும் என்று இத்தாலியை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ

மதகுரு பிரான்செஸ்கோ பீட்ரான்செலோ கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து