முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி மந்திரிசபையில் தெலுங்கானா கட்சி சந்திரசேகரராவ் விருப்பம்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஐதராபாத் - மத்தியில் மோடி மந்திரிசபையில் சேர சந்திரசேகரராவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா பிரிவினையை தொடர்ந்து தெலுங்கானா மாநில முதல்வராக சந்திரசேகரராவ் பதவி வகித்து வருகிறார். ஆந்திர முதல்வராக சந்திரபாபுநாயுடு பதவி வகிக்கிறார். இந்த இரு முதல்வர்களுக்கு இடையே இணக்கமான நட்பு இல்லை. தெலுங்கானா பகுதியில் பணிபுரியும் ஆந்திர அரசு ஊழியர்களை வெளியேற்றியதால் அதிருப்தி நிலவுகிறது. தேசிய அரசியலை பொறுத்தவரை சந்திரசேகரராவ் காங்கிரஸ் ஆதரவாளராகவும், சந்திரபாபு நாயுடு பா.ஜனதா ஆதரவாளராகவும் இருக்கிறார்கள். மத்தியில் பா.ஜனதா அரசில் தெலுங்குதேசம் அங்கம் வகிக்கிறது. அவரது கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய மந்திரிகளாக இருக்கிறார்கள். இதனால் சந்திரபாபு நாயுடு தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறார். இது போல சந்திரசேகரராவும் தேசிய அரசியலில் இடம்பெற விரும்புகிறார். காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத நிலையில் இருப்பதால் பா.ஜனதா பக்கம் சாய சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து சந்திரசேகரராவின் நெருங்கிய விசுவாசிகள் சிலர் பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமீத்ஷாவையும் சந்தித்து தேசிய மந்திரி சபையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியும் சேரவிரும்புவதாக தெரிவித்தார். ஆனால் பா.ஜனதா இதில் அவசரம் காட்டவில்லை. தென் மாநிலங்களில் அனைத்து கட்சிகளுடன் சுமூகமான உறவு வைத்து கொள்ள விரும்புகிறது. இதற்கிடையே சந்திரசேகரராவ் சமீபத்தில் தனது கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பேசுகையில், பாராளுமன்றத்தில் மோடி அரசை எதிர்க்க வேண்டாம் என்று உத்த ரவிட்டு இருந்தார். இதற்காக தன்னை சந்தித்த தெலுங்கானா கட்சி எம்பிக்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து