முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

180 ஒளி ஆண்டு தொலைவில் பூ மியை போன்று புதிய கிரகம்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - 180 ஒளி ஆண்டு தொலைவில் பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இதற்கு கே 2 மிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. அது விண்வெளியில் பறந்து அண்டத்தில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது கெப்லர் விண்கலம் எடுத்து அனுப்பிய புதிய போட்டோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மகாஸ் சூசெட்ஸ் கேம்பிரிட்ஜில் உள்ள விண்வெளி இயற்பியல் ஹார்வர்டு ஸ்மித் சோஷியன் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆண்ட்ரூ வாண்டர் பெர்க் தீவிர ஆய்வு மேற்கொண்டார். அதில் பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் விண்வெளியில் இருப்பது தெரியவந்தது. இதற்கு எச்ஐபி 116454பி என பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியதாக உள்ளது. அதன் அருகே சூ ரியன் உள்ளது. இது பூமியின் சூரியனை விட சிறியதாகவும், குளிர்ச்சியாகவும் உள்ளது. இந்த சூரியன் மூலமே புதிய கிரகம் வெப்பமடைகிறது. அதன் மூலம் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 180 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. இந்த கிரகம் பூமியை விட 12 மடங்கு எடை அதிகம். கே2 மிலின் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. அதன் மூ லம் இதுவரை 35 ஆயிரம் நட்சத்திரங்கள் மற்றும் பல நட்சத்திர கூட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து