முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமிரபரணியில் வெள்ளம் அதிகரிப்பு: மணிமுத்தாறு அணை நிரம்பியது

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

நெல்லை - நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள் நிரம்பி உள்ளன. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை கடந்த வாரம் நிரம்பியது. சேர்வலாறு, கடனா, ராமநதி, குண்டாறு, நம்பியாறு அணைகளும் நிரம்பி விட்டன.

வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் கடந்த மழையின் போது நிரம்பின. பின்னர் அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 2வது முறையாக இந்த அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனிடையே மாவட்டத்தின் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணை நேற்று முழு கொள்ளளவையும் நெருங்கி நிரம்பியது. இது நெல்லை மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்து உள்ளது. நேற்று முன்தினம் காலை 113.80 அடியாக இருந்த இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நேற்று காலை 118.87 அடியானது. பிற்பகலில் இந்த அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 3802 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பிரதான கால்வாயில் 280 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை நீடிப்பதால் அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மலை பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4165.79 கன அடி நீர்வரத்து உள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 410 6 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடனாநதி அணையில் இருந்து 224 கன அடி தண்ணீரும், ராமநதி அணையில் இருந்து 40 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த தண்ணீர் மற்றும் கால்வாய்களில் இருன்து வரும் மழை நீர் அனைத்தும் தாமிரபரணியில் செல்வதால் தாமிரபரணியில் நேற்று 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து