முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. குளிர்கால தொடர் நாளையுடன் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - மக்களவையில் பெரும்பான்மையுடன் திகழும் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 23ம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் மக்களவையில் மொத்தம் 17 மசோதாக்களும், மாநிலங்களவையில் மொத்தம் 11 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலக்கரி சுரங்க மசோதா, தேசிய தலைநகர் சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவை அடுத்து வரும் இரண்டு நாள்களில் மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

2008ம் ஆண்டு முதல் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள காப்பீ ட்டு மசோதா, இம்முறையும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நிறைவேற முடியாத நிலையில் உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றும் வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 336 ஆக உள்ளது. ஆனால் 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் பாஜக கூட்டணி அரசுக்கு 61 உறுப்பினர்கள் பலம் மட்டுமே உள்ளது. இதனால் மத மாற்ற தடை விவகாரம், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விவகாரம் என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு புதிய பிரச்சினைகளை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவையில் முக்கிய பிரச்சினைகள் மீது விவாதங்கள் நடத்த முடியாமலும் மசோதாக்களை நிறைவேற்ற முடியாத நிலையிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு உள்ளது.

மேலும் மக்களவையில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஒரே நாடு, ஒரே சந்தை ஒரே வரி என்ற நோக்குடன் சரக்கு சேவை வரிகள் சட்ட மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதால் இதன் மீதான விவகாரத்தை அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து