முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்லகண்ணு 90-வது பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 90-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடந்தது. பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் விழா நடந்தது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற பொதுச் செயலாளர் பேராசிரியர் இரா.காமராஜ் தலைமையிலான விழாவில், தமிழ் தேசியப் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், தமிழகக் கவிஞர் மன்ற பொதுச் செயலாளர் பொன்னடியான், நடிகர் சார்லி மற்றும் பலர் பங்கேற்றனர்.

கவிஞர் கே.ஜீவபாரதி எழுதிய ‘எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு’ என்ற நூலை, சி.மகேந்திரன் வெளியிட கவிஞர் பொன்னடியான் பெற்றுக்கொண்டார். நல்லகண்ணுவை வாழ்த்தி பிரமுகர்கள் பேசியதாவது:

 

குமரி அனந்தன் பேசியபோது: வாழும் காமராஜராக நல்லகண்ணுவைப் பார்க்கிறேன். காமராஜர்போல இவரும் கட்சியையும், கட்சி நிதியையும் நேர்மையாகக் கையாண்டார், என்று பேசினார்.

மகேந்திரன் பேசியபோது: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேராத ஒருவர், அந்த சமூகத்து மக்களுக்காக பாடுபட்டார் என்றால் அது நல்லகண்ணுதான். தமிழக அரசியல் சூழல் மோசமாகிவிட்டது. நல்லகண்ணு போன்றவர்கள் ஒன்றிணைந்து மாற்றம் கொண்டுவர வேண்டும், என்றார்.

பின்னர், நல்லகண்ணு தனது ஏற்புரையில் கூறியதாவது:

ஆங்கிலேய ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் தியாகி திருவேங்கடம்பிள்ளையுடன் சேர்ந்து ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மறையும் இந்த அடிமைகள் மோகம்’ என்று தெருவில் பாட்டுப் பாடியபடி ஊர்வலம் செல்வோம். அவ்வாறு பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல், வேறு வகையான அடிமை மோகத்தில் உள்ளோம். உலகமயமாக்கல் அதிகரித்து வருகிறது.

சாதி, மத வெறியையும் ஒழிக்க அனைவரும் கட்சிக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைய வேண்டும். கவுரவக் கொலைகளைத் தடுக்க வேண்டும். தலைவர்கள் ஒன்றுசேர்ந்து புதிய அரசியல், சமூக மாற்றத்துக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நல்லகண்ணு பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து