முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடிநாள் நிதியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

 

சென்னை - படைவீரர்களின் நலனுக்காக வசூலிக்கப்படும் கொடிநாள் நிதியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

 

எல்லைகளை காத்திடும் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் நலன்களை காக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதியன்று கொடிநாள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தின் போது கொடிநாள் நிதி வசூலிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த நிதியானது வசூல் செய்யப்படுகிறது.

 

தமிழகத்தில் கொடிநாள் நிதி மூலம் வசூலிக்கப்படும் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004ம் ஆண்டில் ரூ. 9.48 கோடியாக இருந்த இந்த நிதியானது இப்போது இரண்டு மடங்கை விட அதிகமாகியுள்ளது.

 

இது குறித்து அரசு துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கொடிநாள் நிதிக்கு தனி நபர் பங்களிப்பானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு முதல் இதற்காக மத்திய அரசின் விருதினை தமிழகம் பெற்று வருகிறது. தனிநபர் அளிக்கும் நிதியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் மத்திய அரசு அதனை அங்கீகரித்து விருதினை வழங்குகிறது என்றனர்.

2004ம் ஆண்டில் ரூ. 9.48 கோடியாகவும், 2005ம் ஆண்டில் ரூ. 8.93 கோடியாகவும், 2006ம் ஆண்டில் ரூ. 10.68 கோடியாகவும், 2007 முதல் 2012ம் ஆண்டுகள் வரையில் ரூ. 11.06 கோடி, ரூ. 12.30 கோடி என தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. 2013ம் ஆண்டில் மட்டும் கொடிநாள் நிதியாக ரூ. 25 .69 கோடி வசூலாகியுள்ளது.

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து