முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12.72 லட்சம் பேர் எழுதிய குருப் 4 முடிவு 2 மாதத்தில் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

 

சென்னை - தமிழக முழுவதும் குரூப் 4 தேர்வு எழுதிய 12 லட்சம் பேரின் முடிவுகள் இரண்டு மாதத்தில் வெளியிடப்படும் என்று அரசு பணியாளர் தேர்வாணையத்தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்–4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர் பதவி, தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரி தண்டலர், வரைவாளர், நில அளவர் ஆகிய 4963 காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்படும் என்று கடந்த அக்டோபர் 13–ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

 

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 10–ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டிப்போட்டு விண்ணப்பித்திருந்தனர். இதில் 12 லட்சத்து 72 ஆயிரத்து 298 பேர் எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

 

இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 4,448 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் மட்டும் 263 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, எத்திராஜ் கல்லூரி, காயிதேமில்லத் கல்லூரி உள்பட இடங்களில் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது.

 

தேர்வு கூடத்திற்கு பேனா தவிர வேறு எந்த பொருளும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெறும் ஹால் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

 

எழும்பூர் மாகாண மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் பார்வையிட்டார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

 

குரூப்–4 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும். இன்றைய தேர்வில் சுமார் 80 சதவீதம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் விடைத்தாள் பதில்கள் 1 வாரத்தில் வெளியிடப்படும்.குரூப்–2 கலந்தாய்வு வருகிற 29–ந்தேதியும், வி.ஏ.ஓ. கலந்தாய்வு ஜனவரி 27–ந்தேதியும் நடைபெறும். இதேபோல் குரூப்–1 முதன் நிலை தேர்வு முடிவு இன்னும் 15 நாளில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து