முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறில் மத்திய தொழிலக பாதுகாப்பு குழு இன்று ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை - முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்துகிறார்கள்.

 காவிரி பிரச்சினையில் சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டவர் மக்களின் முதல்வர் ஜெயலலிதா. நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட செய்வதற்காக சட்டப்போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டவர் ஜெயலலிதா. இது தனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கிடைத்த மாபெரும் வெற்றி. மாபெரும் சாதனை என்று தானே கருதுவதாக ஒரு பேட்டியில் ஜெயலலிதாவே கூறியிருக்கிறார். அதைப் போல முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தும் பிரச்சினையிலும் பல சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு அதில் வெற்றி கண்டவர் ஜெயலலிதா.

பெரியாறு அணையின் நீர்மட்ட விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் கடந்த 2006ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அப்போது அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தி கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை கேரளா மதிக்கவில்லை. கேரள சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதற்கு முட்டுக்கட்டை போட முயன்றது கேரள அரசு. மேலும் புதிய அணை க ட்டியே தீருவோம் என்றும் முரண்டு பிடித்தது கேரள அரசு. கேரள அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து மீண்டும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தனது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அதில் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தி கொள்ளலாம். அதற்கு கேரள அரசு எந்த இடையூறும் செய்ய கூடாது என்று மீண்டும் ஒரு முறை தீர்ப்பளித்தது.

இதையடுத்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டு ஷட்டர்கள் இறக்கப்பட்டன. இந்த நிலையில் சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் முதலில் 138 அடியை எட்டியது. அதன் பிறகு பெய்த வட கிழக்கு பருவ மழை காரணமாக பெரியாறு அணை நீர்மட்டம் தமிழக அரசின் இலக்கான 142 அடியை எட்டியது. இதை தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். சில மாதங்களுக்கு முன்பு மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் பிரம்மாண்ட பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஜெயலலிதாவை பாராட்டி பேசினார்கள்.

இந்த நிலையில் பெரியாறு அணை பகுதியில் அவ்வப்போது தமிழக அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினார்கள். ஆனால் அதற்கு கேரள வனத்துறையினரும், காவல் துறையினரும் முட்டுக்கட்டை போட்டு ஏதாவது இடையூறு செய்து கொண்டே இருந்தார்கள். இதை தொடர்ந்து அந்த அணை பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையை குவிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் பிரதமருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இந்த நிலையில் இன்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை குழுவினர் பெரியாறு அணை பகுதிக்கு வந்து ஆய்வு நடத்துகிறார்கள். அணையின் பலம் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து