முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பாஸ்கர் நீக்கம்: அன்பழகன்

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:–

தி.மு.கழக 14–வது தேர்தலில் கழகத்தின் செயற்பாட்டில் குறை ஏற்படுத்தும் வகையில் உறுப்பினர் உரிமைச்சீட்டு போலியாக தயாரித்து தலைமைக்கு அனுப்பிய குற்றத்துக்காக தென்சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதி 177–வது வட்டம் சீ.பாஸ்கர் என்ற ரெட்டி பாஸ்கர், மாவட்டப் பிரதிநிதி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

இதே போல் தர்மபுரி மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் பி.என்.பி. இன்பசேகரன் தலைமை செயற்குழு உறுப்பினர் எ.கருணாநிதி, பாலக்கோடு ஒன்றியச் செயலாளர் ஜி.எல்.வெங்கடாசலம், பி.கே.அன்பழகன் ஆகியோர் கட்சித் தேர்தலில் குழப்பம் விளைவிக்கும் வகையிலும் அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்ட காரணத்தால் தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உள்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்டு) வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து