முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுகவில் உட்கட்சி தேர்தலால் கோஷ்டி மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - திமுகவில் உட்கட்சி தேர்தலின் காரணமாக கடும் குழப்பமும், கட்சியினரிடையே பெரும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளன.
மாவட்ட  செயலாளர்கள் தேர்தலை அறிவாலயத்தில் நடத்தியும் கூட அங்கும் கோஷ்டி மோதலால் கைகலப்பு அடிதடி ஏற்பட்டதுடன் அலுவலகத்தையும் தாக்கி உள்ளனர்.
திமுகவில் கடந்த 3 மாதங்களாக 14-வது முறையாக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள 12,514 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட சுமார் 99 ஆயிரம் கிளைகளுக்கும் மாநகராட்சி, பேரூராட்சி, நகரம்  ஒன்றியம் உள்ளிட்ட சுமார் 1 லட்சத்து 12 ஆயிரம் வார்டு பொறுப்புகளுகளுக்கும் முதற்கட்டமாக தேர்தல்கள் நடைபெற்றன. 
இதையடுத்து 578 ஒன்றியங்கள் 129 நகரங்கள், 97 பகுதிகள் 538 பேரூராட்சிகள் இவற்றிற்கான நிர்வாகிகள் தேர்தலும் இரண்டாம் கட்டமாக நடைபெற்று முடிந்தன.
இந்த தேர்தல்களின்போதே பல்வேறு பகுதிகளில் கோஷ்டி மோதல், அடிதடி, ரகளை நடைபெற்றது. இதனால் ஒரு சில பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை அறிவிக்காமலேயே தலைமை ஒத்திவைத்தது.
ஒரு சில ஒன்றிய, நகரங்களுக்கான தேர்தல் அறிவாலயத்தில் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்டமாக கட்சி ரீதியான 65 மாவட்டங்களுக்கான தேர்தல்களை அந்தந்த பகுதிகளில் நடத்த முடியாமல் அறிவாலயத்திலும், ராயபுரத்தில் உள்ள அறிவகத்திலும் நடத்துகின்றனர். இங்கும் கோஷ்டி மோதல், கைகலப்பும் நடைபெற்று இருக்கிறது.
19-ந் தேதி 13 மாவட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்ற போது தஞ்சை, கன்னியாகுமரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கான தேர்தலின் போது கோஷ்டி மோதல் உருவாகி ஒரு சில திமுக நிர்வாகிகள் அறிவாலயத் திலேயே தாக்குதல் நடத்தியதால் கண்ணாடிகள் உடைந்து விழுந்து நொறுங்கி உள்ளது.கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள்  மூத்த மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை பெற வேண்டும் என்று செயல்பட்டு இருப்பதால் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இப்படிப்பட்ட குழப்பமான நிலை நீடிப்பதால் தேர்தல் முடிந்து கட்சியின் பொதுக்குழு தொடங்கி தலைவர்  பொதுச்செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுவதற்குள் மாநில, மாவட்ட அளவிலான பல்வேறு நிர்வாகிகள் திமுகவில் இருந்து விலகி வேறு கட்சிகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட குழப்பமான நிலை நீடிப்பதால் தேர்தல் முடிந்து கட்சியின் பொதுக்குழு தொடங்கி தலைவர்  பொதுச்செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுவதற்குள் மாநில, மாவட்ட அளவிலான பல்வேறு நிர்வாகிகள் திமுகவில் இருந்து விலகி வேறு கட்சிகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து