முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகம் காவிரியில் தடுப்பணை கட்டும் திட்டத்தை கைவிட கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கர்நாடக அரசு காவிரியில் தடுப் பணை கட்டும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி களும், விவசாய சங்கங்களும், தமிழக மக்களும் இதில் உறுதியோடு ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம்.

காவிரி கண்காணிப்பு குழு காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு சந்தேகத்திற்குறியதாக இருக்கிறது.

பிஜேபி கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. காரணம் பிஜேபி கட்சியின் மத்திய அமைச்சர் வீட்டில் ரகசிய கூட்டம் நடத்தி, காவிரியில் தடுப்பணை கட்டுவதை ஆதரித்தும், மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்தும் வருகிறார்கள்.மத்திய அரசு இப்பிரச்சனையில் நடுநிலையோடு செயல்படாமல் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை காட்டு கிறது. மத்திய அமைச்சர்களை தூண்டிவிட்டு மத்திய பிஜேபி அரசு மௌனம் சாதிக்கிறது.

எனவே இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் மத்திய அரசு காவிரியில் தடுப்பணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்துவோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து