முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி திரட்டி வரும் பயங்கரவாத அமைப்புகள்: இந்தியா கவலை

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

நியூயார்க் - லஸ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஐ.நா. விதித்துள்ள பொருளாதார தடையையும் மீறி அவை தொடர்ந்து நிதி திரட்டி வருவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கூறியுள்ளது.
பயங்கரவாதம், எல்லை தாண்டிய குற்றங்கள் ஆகியவை குறித்து நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி பகவத் பிஷ்னோய் கூறியுள்ளார்.
லஸ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பயண தடை, சொத்து முடக்கம், ஆயுத விற்பனை தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டுள்ளது. இதையும் மீறி போதை பொருள் கடத்தல், கடல் கொள்ளை, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் அந்த அமைப்புகள் தொடர்ந்து நிதி திரட்டி வருகின்றன. பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட பிறகு அந்த அமைப்புகளின் உயிர்நாடியாக விளங்கும் நிதியாதாரங்கள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.
லஸ்கர் இ தொய்பாவை பயங்கரவாத அமைப்பாக ஐ.நா. அறிவித்துள்ள நிலையிலும், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணை தூதரகம் மீது அந்த அமைப்பால் கடந்த மே மாதம் தாக்குதல் நிகழ்த்த முடிந்தது. அந்த அமைப்புக்கு தேவையானதை விட அதிகமாகவே அதற்கு நிதி கிடைத்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் இதனை தடுக்க முடியவில்லை. எனவே பொருளாதாரத் தடையை முழுமையாக அமல்படுத்துவது குறித்து ஐ.நா. தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து