முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஊழல்: குற்றப்பத்திரிகை ஏற்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      ஊழல்
Image Unavailable

புது டெல்லி - ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பயணத்துக்காக இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு  ஒப்பந்தம் செய்து கொண்டது.
ரூ. 3,600 கோடி மதிப்பிலான இந்த ஆர்டரை பெற்று தருவதாக கூ றி இந்திய தரப்பில் சிலர் அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ. 3 60 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி தியாகி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதே சமயம் இந்த ஊழலில் தொழிலதிபர் கவுதம் கேதான், அவரது மனைவி ரீது, சண்டிகரை சேர்ந்த ஏரோமேட்ரிக்ஸ், இத்தாலியை சேர்ந்த 2 இடைத்தரகர்கள் ஆகியோர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் கவுதம் கேதான் உள்ளிட்டோர் மீது அமலாக்கப்பிரிவினர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வி.கே. குப்தா முன்னிலையில் கடந்த மாதம் 20ம் தேதி தாக்கல் செய்தது.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தற்போது சிறையில் இருக்கும் கவுதம் கேதானையும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களையும் அடுத்த மாதம் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இதனிடையே  இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கேதான் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி வி.கே. குப்தா தள்ளுபடி செய்தார். முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக கேதானை அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து