முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் கூட்டணி ஆட்சி: அத்வானி

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - மத்தியில் மீண்டும் கூட்டணி அரசு ஏற்படத்தான் வாய்ப்பிருப்பதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
நம் நாட்டில் கூட்டணி சகாப்தம் முடிந்து விட்டதாக நான் கூறமாட்டேன். இந்தியா போன்ற மாறுபட்ட தன்மைகள் கொண்ட நாட்டில் மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்புள்ளது. இந்தியா போன்றதொரு நாட்டில் ஒருவர் அனைத்துச் சூழ்நிலைகளையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஒரு கட்சி அரசு இருந்தது. எனினும் அந்த நிலை நீடிக்கவில்லை. வாஜ்பாய் அரசு கூட தனி கட்சி அரசு அல்ல.
வாஜ்பாய் போன்ற தேசபக்தருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டால் அது மிகவும் பொருத்தமாக இருக்கும். நாட்டில் 1975இல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அது தொடர்பான சட்டப் பிரிவுகளை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிந்திருக்கவில்லை என்று கூறப்படுவதை நான் ஏற்கவில்லை. இந்திராவின் அரசியல் வாழ்க்கையில் அவசர நிலை என்பது ஒரு கரும்புள்ளி. இவ்வாறு அத்வானி கூறினார். கூட்டணி ஆட்சியே அமையும் என்ற பொருளில் அத்வானி பேசியிருப்பது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து