முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - பவானிசாகர் அணை, கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம், பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்துக்கு இன்று
முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
3 நீர்த்தேக்கங்களில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதன் மூலம் மொத்தம் 27 ஆயிரத்து 151 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
இதுகுறித்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்   வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
1) ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஈரோடு வட்டத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஈரோடு வட்டத்தில் உள்ள  காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காக நாளை (23–ந்தேதி) முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.
இதனால், ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்.
2) கிருஷ்ணகிரி மாவட்டம்,  கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் இரண்டாம்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம்,  கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்காக       நாளை (23–ந்தேதி) முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.
இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம்,  கிருஷ்ணகிரி  வட்டத்தில்  உள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்.
3) கிருஷ்ணகிரி மாவட்டம்,  போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம்,  போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம்போக  பாசனத்திற்காக   நாளை (23–ந்தேதி) முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.
இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம்,  போச்சம்பள்ளி வட்டத்தில்  உள்ள 2,396 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்.
இவ்வாறு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து