முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஜன-7-ல் வேலை நிறுத்தம்

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - ஊதிய உயர்வு மற்றும் வங்கிகள் தனியார் மயமாகுதலை கண்டித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வரும் ஜனவரி 7ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரியும் வங்கிகள் தனியார் மயமாக்குதலை கண்டித்தும் கடந்த இரண்டு மாதங்களில் 2 முறை போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் மத்திய அரசு இது குறித்து எந்த முடிவும் எடுக்காததால் வங்கி ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதற்கு மேலும் மத்திய அரசால் தீர்வு காணப்படாவிட்டால் மேலும் ஜனவரி 21ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் அதாவது ஜனவரி 24ம் தேதி வரை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியரிகள் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாலும், ஜனவரி 25,26ம் தேதி அரசு விடுமுறை என்பதாலும் தொடர்ச்சியாக வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து