முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணிக்கு கெடு விதிக்கப்படவில்லை

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - குடும்ப அட்டைகளில் உள்தாள்கள் ஒட்டும் பணி முன்னேற்றம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நேற்று சேப்பாக்கம் கூட்டரங்கில் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2015 முதல் 31.12.2015 வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலை அங்காடிகளிலும் 15.12.2014 முதல் நடைபெற்று வரும் உள்தாள்கள் ஒட்டும் பணியினை அமைச்சர் மாவட்ட வாரியாக ஆய்வு செய்தார்.
தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2015 முதல் 31.12.2015 வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலை அங்காடிகளிலும் 15.12.2014 முதல் நடைபெற்று வரும் உள்தாள்கள் ஒட்டும் பணியினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்த அமைச்சர் அவர்கள், இன்று வரை 1 கோடியே 42 இலட்சத்து 93 ஆயிரத்து 355 அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி (72ரூ) நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
குடும்ப அட்டைதாரர்களின் வசதிக்கென வழங்கீட்டு கூறு முறையில் (ளுவயபபநசiபே ளுலளவநஅ) உள்தாள்கள் வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் அங்காடிகளுக்கு சென்று உள்தாள்களை பெற்றுக் கொள்ளலாம்.  தங்களுக்கு குறிப்பிடப்பட்ட நாட்களில் செல்ல இயலாதவர்கள் அந்த வாரத்தின் சனிக்கிழமையில் அங்காடிகளில் உள்தாள்களை பெற்றுக் கொள்ளலாம்.
குடும்ப அட்டையில் உள்தாளை இணைத்து பெறுவதற்கு காலக்கெடு ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர் அவர்கள் மீதமுள்ள குடும்ப அட்டைகளில் உள்தாள்கள் ஒட்டும் பணியினை துரிதப்படுத்தி, பொது மக்களுக்கு எவ்வித சிரமமுமின்றி, இதனை விரைந்து முடிக்க வேண்டுமென்று அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.   
வெள்ளை நிறமுடைய எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகவரி ஆதாரத்திற்காக வழங்கப்படும் மஞ்சள் நிறமுடைய தக்கல் குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுடைய “ சூ “  குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள  றறற.உடிளேரஅநச.வn.படிஎ.in  என்ற இணைய தளத்தில்  வசதி செய்து தரப்பட்டுள்ளது.   இவ்வசதி 31.3.2015 வரை செயல்பாட்டில் இருக்கும்.  இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இணைய தளத்தில் குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்ள இயலாத வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடைய எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்களில் அவர்களுடைய குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையெனில்  உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக இ-மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம்.  அலுவலர்களின் செல்லிடை பேசி மற்றும் இ-மெயில் முகவரிகள் இத்துறையின் இணைய தளத்தில் (றறற.உடிளேரஅநச.வn.படிஎ.in) அளிக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டம் மற்றும் குடும்ப அட்டைத்தாரர்களின் குறைபாடுகளைக் களைவதற்கு, “குறைதீர் முகாம்கள்” சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், மாதந்தோறும்                                   2ம் சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை                   நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், அட்டைகளின் நகல் கோருதல், குடும்ப அட்டைகளில் உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், எரிவாயு இணைப்புகள் மற்றும் இவை தொடர்பான திருத்தங்கள் குறித்த மனுக்கள் பிற்பகல் வரை பெறப்பட்டு, உரிய பரிசீலனைக்குப் பிறகு அன்று மாலைக்குள் அவற்றுக்கு தீர்வு காணப்படுகிறது. இக்குறைதீர் முகாம்களில் மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.  ஜூன் 2011 முதல் 13.12.2014 வரையில் இம்முகாம்களில் 3 இலட்சத்து 7 ஆயிரத்து 70 மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வகை குறைதீர் முகாம்களை நடத்தும் ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் என்று அமைச்சர் தெரிவித்தார்.  
தமிழ்நாட்டில் 01.06.2011 முதல் 30.11.2014 வரை 11 இலட்சத்து                   14 ஆயிரத்து 761 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 3 இலட்சத்து 38 ஆயிரத்து 984 போலிக் குடும்ப அட்டைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் கிருஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருள்களும், உரிய தரத்துடன் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்பட வேண்டுமென்று அலுவலர்களைஅமைச்சர் கேட்டுக் கொண்டார்.  
அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களின் முழுப்பயன்களும் உரியவர்களை சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, அத்தியாவசியப் பொருள்களின் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  இன்று வரை                   21 ஆயிரத்து 66 நபர்கள் கைது செய்யப்பட்டு அவற்றில் 616 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் (க்ஷஆ ஹஉவ) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.  
        இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் அரசு உணவுத்துறை  முதன்மை செயலாளர் .முகம்மது நசீமுத்தின்,., உணவுப் பொருள்   வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் .சூ.கோபாலகிருஷ்ணன்,., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்              கழக நிர்வாக இயக்குனர் .எம்.சந்திரசேகரன்,., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் .இரா.கிர்லோஷ்குமார்,., உணவுப்  பொருள் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் .கே.இராதாகிருஷ்ணன்,இ.கா.ப., மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து