முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெப்போலியன் கருத்துக்கு மு.க.அழகிரி மறுப்பு

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை - பா.ஜனதாவில் சேர்ந்த நடிகர் நெப்போலியன் தெரிவித்த கருத்துக்கு மு.க. அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் அமீத்ஷாவை சந்தித்து நடிகர் நெப்போலியன் அக்கட்சியில் இணைந்தார். இது குறித்து நடிகர் நெப்போலியன் கருத்து தெரிவிக்கையில், திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. மு.க. அழகிரியின் ஆசியோடுதான் பா.ஜனதா கட்சியில் இணைந்தேன் என்று தெரிவித்தார்.
நடிகர் நெப்போலியன் கருத்துக்கு மதுரையில் நேற்று மு.க. அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார். திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதற்காகத்தான் தவறுகளை சுட்டிக்காட்டி அந்த தவறுகளை களைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ள நடிகர் நெப்போலியன் எனது ஆசியோடுதான் அந்த கட்சியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அது போல ராமநாதபுரம் எம்பியாக இருந்த ரித்தீஷூம் இதை கருத்தை தெரிவித்தார். ரித்திஷ், நெப்போலியன் ஆகியோர் மாற்றுக்கட்சியில் சேர்ந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் என்னிடம் சொல்லவும் இல்லை. திமுகவில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் சேருங்கள் என்று நான் யாரையும் சொல்லவில்லை. திமுகவின் வளர்ச்சிக்காக சில கருத்துக்களை தெரிவிக்கிறேனே தவிர திமுகவுக்கு எதிராக எந்த காலக்கட்டத்திலும் செயல்பட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து