முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்கை பரப்பு செயலாளர் ஆகிறார் பிரியங்கா

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. சோனியாகாந்தி போட்டியிட்ட ரேபரேலி, ராகுல்காந்தி நின்ற அமேதி ஆகிய தொகுதிகளில் மட்டும் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் செய்தார். அவருக்கு பொதுமக்களிடம் அமோக ஆதரவு இருந்தது. எனவே, பிரியங்கா காந்தி நாடு முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். என்றாலும் கட்சி மேலிடம் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை.
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, ராகுல் காந்தி மீது கடும் விமர்சனம் எழுந்தது. பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. கட்சி மேலிடம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  என்றாலும், காங்கிரசுக்கு உயிரூட்ட பிரியங்காவுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வருகிறது. இதில் பிரியங்காகாந்தி காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளர் ஆவார் என்று கூறப்படுகிறது.
கட்சியில் பெரும்பாலானவர்கள் பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். பிரியங்கா வருகை தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். இதனால் பா.ஜனதாவுக்கு சரியான பதிலடி கொடுக்க முடியும் என்று மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சோனியா காந்தி பரிசீலித்து வருகிறார். எனவே பிரியங்கா கொள்கை பரப்பு செயலாளர் ஆக வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து