முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேல்முருகனின் தந்தை மரணம்: ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - வாழ்வுரிமைக்கட்சித்தலைவர் வேல்முருகனின் தந்தை திருநாவுக்கரசு மறைவுக்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் , முன்னாள் முதலமைச்சருமான  ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல்  செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் அன்புச் சகோதரர் வேல்முருகனின் தந்தை திருநாவுக்கரசு உடல் நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
அன்புத் தந்தையை இழந்து வாடும் வேல்முருகனுக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து