முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ரெய்லரை பார்த்து படத்தை முடிவு செய்துவிடக் கூடாது: பாக்யராஜ்

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - சில காட்சிகளைப் பார்த்து ஒரு  படத்தை  பற்றி முடிவு செய்யக் கூடாது என்று  இயக்குநர் பாக்யராஜ்  பேசினார்.
மெலடி மூவீஸ்  தயாரிக்கும் படம் 'தரணி'. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இயக்குனர் கே. பாக்யராஜ் ஆடியோவை  வெளியிட்டார். படக்குழுவினரும் வந்திருந்த திரையுலக முன்னணியினரும் பெற்றுக் கொண்டனர்.இசைத்தட்டை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசினார். அவர் பேசியதாவது:  ". குகன் எடுத்த ட்ரெய்லர் சில காட்சிகளைப் பார்க்கும் போது இது எப்படிப்பட்ட படம் என்று புரியவில்லை. ட்ரெய்லர் பார்த்து சில காட்சிகளைப் பார்த்து படம் பற்றி முடிவு செய்யக் கூடாது.இந்தப் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும் போது இது நாடகக்கலை பற்றிய கதையோ என நினைத்தேன்.ஆரி வரும் சில காட்சிகளைப் பார்க்கும் போது, வேறு மாதிரி தெரிந்தது. மணல் லாரிகள் வரும் காட்சிகளைப் பார்க்கும் போது அது வேறு மாதிரி தெரிந்தது. புரிந்து கொள்ள முடியவில்லை. பாடல் காட்சிகள் வேறுமாதிரி இருக்கின்றன.
ஆனால் வித்தியாசமான படமாக இருக்கும் என்று மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. " என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்..படத்தின் இயக்குநர் குகன்சம்பந்தம் படம் பற்றிப் பேசும் போது "இது மூன்று  மனிதர்கள் பற்றிய கதை.வாழ்க்கையில் சரியான முடிவு எடுக்கும் தருணம் முக்கியமானது .ஆனால் ஒரு கட்டத்தில் முடிவெடுத்துதான் ஆக வேண்டும் அந்த முடிவு எங்கு கொண்டு சேர்க்கும் என்று தெரியாது. இதைப் பேசும் படம்தான் 'தரணி' "என்றார்.நடிகர் நாசர் , இசையமைப்பாளர் டி.இமான்.கவிஞர்கள் பழனிபாரதி, முத்துலிங்கம், இசையமைப்பாளர்கள் சத்யா, ஜி.வி.பிரகாஷ், கே., நடிகர்கள் சிம்பு, ஆரி,  குமரவேல், அஜய் கிருஷ்ணா, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன் ,வருணிகா, சாண்ட்ரா ஆகியோரும் விழாவில் பங்கேற்று பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து