முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் குறைந்தபட்ச தட்ப வெப்பநிலை 6.4 டிகிரி செல்சி யஸாகவும் பகல்நேர அதிகபட்ச தட்ப வெப்பநிலை 18 டிகிரியை ஒட்டியும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வழக்கத்தைவிட 2 டிகிரி குறைவாகும்.
வடக்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், “பனி மூட்டம் காரணமாக காலை 8.30 மணியளவில் 600 மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள வற்றை காண முடியாத நிலை இருந்தது. இதனால் வட-கிழக்கு எக்ஸ்பிரஸ், தாஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் மகாபோதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மேலும் டெல்லி யிலிருந்து புறப்பட வேண்டிய 9 ரயில்களின் நேரமும் மாற்றிய மைக்கப்பட்டன” என கூறப்பட் டுள்ளது.
பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ் தான் ஆகிய மாநிலங்களிலும் பனி காரணமாக, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. இப்பகுதிகளில் தட்ப வெப்பநிலை வழக்கத்தைவிட குறைவாக உள்ளது. இதனால் மின்சார விநியோகமும் பாதிக்கப் பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடும் குளிருக்கு இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து