முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2015 உலகக் கோப்பை: இந்திய தூதராக சச்சின் நியமனம்

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

துபாய் - ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் ஐசிசி 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தூதராக இந்திய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2015 பிப்.14-ஆம் தேதி முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு விளம்பரத் தூதராகவும், ஐசிசி-யின் பல்வேறு முயற்சிகளையும் சச்சின் டெண்டுல்க்ர் விளம்பரப்படுத்துவார்.
சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளிலும் 200 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 45 போட்டிகளில் 2,278 ரன்களை 56.95 என்ற சராசரியில் எடுத்து அதிக ரன்களுக்கான சாதனையை தன்வசம் வைத்துள்ளார் சச்சின்.
2003 உலகக் கோப்பை போட்டித் தொடரில் 673 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார் சச்சின். தொடர்ந்து 2-வது முறையாக ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தூதராக நியமிக்கப்பட்டதை எனது மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.
கடந்த 6 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பிறகு இந்த உலகக் கோப்பை எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும், ஏனெனில் நான் போட்டிகளை பார்வையிடுபவனாக இருப்பேன். 1987-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின் போது பந்துகள் எடுத்துப் போடும் சிறுவனாக இருந்தேன், அதன் பிறகு இப்போது விளையாடாமல் போட்டிகளில் வேறு விதமாக பங்கேற்கிறேன்.
ஒரு சாம்பியன அணி உலகக் கோப்பையை வென்று கோப்பையைத் தூக்கும் போது அது பல இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தை அளிக்கும். இலக்கை நோக்கி பயணிக்கும் கனவை அவர்களிடத்தில் வித்திடும். நானும் 22 ஆண்டுகளாக இத்தகைய கனவை துரத்தி கடைசியில் 2011-ல் பூர்த்தி அடைந்தேன். இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து