முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்ககிரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் நீக்கம்

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - சேலம் மாவட்டத்தை சேர்ந்த சங்ககிரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் எம்.கே.ராமச்சந்தர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்
இது குறித்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:
கழகத்தின் கொள்கைகளுக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானவகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் சேலம் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த சங்ககிரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் எம்.கே.ராமச்சந்தர் ( ஐவேலி ஊராட்சி மன்றத்தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புக்கள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து