முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குநர் பாலசந்தருக்கு வீடியோ மூலம் கமல் உருக்கம்

வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை,டிச.26: தனது குரு இயக்குநர் பாலசந்தரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், தனது மனவேதனைகளை வீடியோவாக பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்..
உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் இயக்குநர் சிகரம் பாலசந்தர். முதலில் அன்னாரது உடல் இன்று இறுதிச் சடங்கு செய்யப்படுவதாக இருந்தது. தன் பட வேலைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார் நடிகர் கமல். எனவே, அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு வந்து நேற்று இரவு பாலசந்தருக்கு கமல் நேரில் அஞ்சலி செலுத்துவார் எனக் கூறப்பட்டது.
ஆனால், தங்கள் முடிவை மாற்றிக் கொண்ட குடும்பத்தார் நேற்றுமுன்தினம் 
 இறுதிச் சடங்கை நடத்தி முடித்தனர். இதனால் தனது சினிமா குருவாகப் பாவித்த பாலசந்தரின் உடலைக் கடைசியாக நேரில் காணும் வாய்ப்பை இழந்தார் கமல்.
ஆனபோதும், பாலசந்தரின் இறுதி அஞ்சலிக்குக் கூட வர முடியாத படி அவர் கற்றுக் கொடுத்த சினிமா வேலைகளில் ஈடுபட்டிருப்பதே அவருக்கு தான் செலுத்தும் இறுதி அஞ்சலி தான் என கமல் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது :-
100 படங்கள் இயக்கியதோடு அல்லாமல், பல நூறு கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர்களில் நானும் ஒருவன்.அவர் எனது வற்புறுத்தலின் பேரில் பங்கு கொண்ட உத்தம வில்லன் என்ற அந்தப் பதிவு என் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான பதிவாகும். வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட என் வாழ்வின் ஒரு பதிவாக அது அமைகிறது
.அதற்கு மட்டுமல்ல, நான் எத்தனை விஷயங்களுக்காக இயக்குநர் பாலசந்தருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை.சடங்குகளில் அதிக நாட்டமில்லாத நான், அவரது இறுதிச் சடங்கில்கூட பங்கு கொள்ள முடியாமல் அவர் எனக்கு அளித்த இந்த சினிமா தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன். இதுவே அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கே. பாலசந்தரின் குரல் அவரது மாணவர்களின் கலைவழி மூலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். அதைக் கேட்க வைப்பது என் கடமையும்கூட என்றார் கமல்ஹாசன்.".

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து