முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் முதல்வராக ரகுவர் தாஸ் தேர்வு

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ராஞ்சி - ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பாஜக தேசிய துணைத் தலைவர் ரகுவர் தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பழங்குடிப் பிரிவைச் சேராத ஒருவர் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அங்கு இழுபறி நிலை நீடிக்கிறது. ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால் இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைய உள்ளது இந்த வெற்றியை நாடு முழுவதும் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் பிரதமர் மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்தநிலையில் அங்கு முதல்மந்திரியை தேர்வு செய்வதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்எல்ஏக்கள் கூட்டம் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் மேலிட பார்வையாளர்களாக பாரதீய ஜனதா தலைவர்கள் ஜெ.பி. நத்தா, வினய் சகஸ்ரபுத்தே ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் மந்திரி பதவிக்கு முன்னாள் துணை முதல் மந்திரியும், பாரதீய ஜனதா தேசிய துணை தலைவருமான ரகுபர்தாஸ் பெயரை மேலிட தலைவர்கள் முன்மொழிந்தனர். அதை எம்எல்ஏக்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து ரகுபர்தாஸ் ஜார்கண்ட் மாநில முதல்வராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
ரகுபர்தாஸ் பழங்குடி இனத்தவர் அல்லாதவர் ஆவார். ஜார்கண்டில் 32 சதவீதம் பேர் பழங்குடியின மக்கள் ஆவார்கள். ஜார்கண்ட் மாநிலம் 2000ம் ஆண்டு உருவானதில் இருந்து பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்தான் முதல்வர்களாக இருந்துள்ளனர். தற்போது ரகுபர்தாஸ் முதலாவது பழங்குடி இனத்தவர் அல்லாத முதல் மந்திரி ஆவார்.
ஜார்கண்டில் இதுவரை 9 அரசுகள் ஆட்சி செய்துள்ளன. 3 முறை ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. இந்த மாநிலத்தில் கடந்த 2000, 2003 மற்றும் 2010ம் ஆண்டுகளில் 3 முறை பாரதீய ஜனதா ஆட்சி செய்தது. இப்போது பாரதீய ஜனதா மீண்டும் 4வது முறையாக இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது.
மாநில கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தான் அங்கு செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தது. சிபுசோரன் 3 முறையும், அவரது மகன் ஹேமந்த் சோரன் ஒரு முறையும் முதல் மந்திரி பதவி வகித்தனர். கடைசியாக ஹேமந்த் சோரன் முதல் மந்திரி பதவி வகித்தார். தேர்தல் தோல்வியால் ஹேமந்த் சோரன் கடந்த 23ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். 5 நாட்களுக்கு ஹேமந்த் சோரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. எனவே புதிய அரசு வருகிற 30ம் தேதி  பதவியேற்கும் என தெரிகிறது.
ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்கும் ரகுபர்தாஸ் சத்தீஸ்கர் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரது தந்தை ஜாம்ஷெட்பூருக்கு குடிபெயர்ந்து டாடா ஸ்டீல் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். ரகுபர்தாசும் டாடா ஸ்டீல் தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்தார். பாரதீய ஜனதா மாணவர் அமைப்பில் சேர்ந்தார். பின்னர் பாரதீய ஜனதா உறுப்பினரானார்.
சமீபத்தில் இவரை தேசிய  துணை தலைவராக கட்சித் தலைவர் அமீத்ஷா நியமித்தார். இந்த தேர்தலில் ரகுபர்தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 5 முறை எம்எல்ஏவாக இருந்த ரகுபர்தாஸ், ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதா தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார். 2000ம் ஆண்டில் மந்திரியாகவும், 2009ல் சிபுசோரன் அரசில் துணை முதல்வராகவும் பணியாற்றி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து