முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்மிண்டன் தரவரிசை: 4-வது இடத்தில் ஸ்ரீகாந்த்

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் ஆடவர் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறிய 3-வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் இந்தியாவின் பிரகாஷ் படுகோன் முதலிடத்தையும், இந்திய அணியின் தற்போதைய பயிற்சி யாளர் கோபிசந்த் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தோடு, ஹாங்காங் மற்றும் துபாய் ஓபன் போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறினார் ஸ்ரீகாந்த். இதன்மூலம் அவர் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறுகையில், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏறக்குறைய 45-வது இடத்தில் இருந்தேன். அதனால் இந்த ஆண்டில் 4-வது இடத்துக்கு முன்னேறுவேன் என எதிர்பார்க்க வில்லை. வரும் சீசனிலும் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கியுள்ளேன். வரும் ஆண்டு 2016 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற் கான ஆண்டாகும்” என்றார்.
பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், “காஷ்யப் 6-வது இடத்துக்கு முன்னேறியிருந்தார். நான் 4-வது இடத்துக்கு முன்னேறினேன். இப்போது ஸ்ரீகாந்த் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது மிகப்பெரிய சாதனையாகும். பிரகாஷ் படுகோன் முதலிடத்தைப் பிடித்தவர். ஆனால் அது அதிகாரப்பூர்வ தரவரிசையா என்பது எனக்கு தெரியாது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து