முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் கலவரம் நீடிப்பு: 10 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி - அசாம் மாநிலத்தில் போடோ தீ விரவாதிகள் நடத்திய தாக்குதலில் 83 ஆதிவாசிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஆதிவாசிகளில் சுமார் 250 பேரை காணவில்லை என்று தேடி வருகிறார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அசாம் மாநிலத்துக்கு சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். என்றாலும் அசாமில் இன்னும் சில இடங்களில் கலவர பதட்டம் நீடிக்கிறது. நேற்று முன்தினம் இரவு சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள பாலிதனகா எனும் கிராமத்தில் போடோ தீவிரவாதிகள், ஆதிவாசிகளின் வீடுகளை தீவைத்து  எரித்தனர். ஆதிவாசிகளின் உடமைகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. தீவிரவாதிகளின் தாக்குதல் ஓயாததால் ஆதிவாசி மக்கள் தங்கள் கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள்.  அவர்களுக்காக அசாம் மாநில அரசு பல இடங்களில் முகாம்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த முகாம்களில் இதுவரை 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். சோனித்பூர், பக்சாசிரங், கோக்ராஜ்கர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மக்கள் பீதியுடன் காணப்படுகிறார்கள். அங்கு அமைதி ஏற்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த 4 மாவட்டங்களிலும் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகிறார்கள். இதற்கிடையே போடோ தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கை நேற்று காலை தொடங்கியது. அசாம் ரைபிள் படை, மத்திய பாதுகாப்பு படை, மாநில போலீஸ் மற்றும் ராணுவம் ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் போடோ தீவிரவாதிகள் பூடான், மியான்மர் நாடுகளுக்குள் தப்பி செல்ல தொடங்கியுள்ளனர். அப்படி வரும் தீவிரவாதிகளை வேட்டையாட உதவும்படி பூடான், மியான்மர் நாடுகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து