முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை நியாய விலைக்கடைகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை சைதாப்பேட்டையில் கூட்டுறவு நியாயவிலை கடைகளில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட நியாய விலைக்கடை ஊழியர்கள் இருவரை  சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: மக்களின் முதல்வர்ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி,கூட்டுறவுத்துறை அமைச்சர் .செல்லூர் கே.ராஜூ  ( சென்னை சைதாப்பேட்டை மற்றும் மேற்கு சைதாப்பேட்டை பகுதியிலுள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் 5 நியாயவிலைக் கடையிகளில் வருகிற பண்டிகை காலங்களை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், உள்தாள் ஓட்டும் பணி சரியாக நடைபெறுகிறதா என்பது குறித்தும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கமானது  259 நியாயவிலைக் கடைகள் மூலம் 3,26,862 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகிறது.  மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 8 மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம் மூலம் மண்ணெண்ணெய் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது.
சைதாப்பேட்டை மற்றும் மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் (டி.யூ.சி.எஸ்)  நியாயவிலைக் கடை எண்.1, 3, 6, 8 மற்றும் 13 ஆகிய 5 நியாயவிலைக் கடைகள் மூலம் 7,097 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களான விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற பொருள்கள்,  மண்ணெண்ணெய் மற்றும்  சிறப்பு பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அங்குள்ள பொதுமக்களிடம் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து பொருள்களும் முறையாக வழங்கப்படுகிறதா? ஏன கேட்டறிந்தார்.  .
பின்னர், அமைச்சர் செல்லூர் ராஜூ பொருள்களின் இருப்பு குறித்து பதிவேட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள விற்பனையாளர்கள் எம்.அருணாதேவி மற்றும்.இ.தசதரன் ஆகியோரை பணியிடை நீக்கம் (செய்து உத்தரவிட்டார்.
பின்னர், பொருள்களின் தரம், அளவு போன்றவற்றை சரிபார்த்து, பொருள்கள் தரமாகவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருள்கள் முறையாகவும் வழங்கப்பட வேண்டுமென்றும், இதற்கென தனியே ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்,
இந்த ஆய்வின் போது  போது திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் பி.பாலமுருகன், இணைப்பதிவாளர் (பொதுவிநியோகத் திட்டம்) .குழந்தைவேலு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து