முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதமாற்ற விவகாரம்: காங்., மீது வெங்கையா குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

பெங்களூரு - மதமாற்ற விவகாரத்தில் காங்கிரஸ் மக்களை திசை திருப்ப முயல்கிறது என்றும் அந்த விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போட்டு வருவதாகவும் மத்திய நகர வளர்ச்சி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
 பெங்களூரில் நடைபெற்ற தேசிய நல்லாட்சி தின விழாவை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது,
எந்த அரசுக்கும் மதம் கிடையாது. மதம் தனி நபர் சார்ந்தது. மதமாற்ற விவகாரத்தில் மக்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சிக்கிறது. மதமாற்ற விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலையை கடைப்பிடித்து வருகிறது. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்புவதை போலத்தான் இந்து மதத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய் மதத்திற்கு வருகிறார்கள். இதை காங்கிரஸ் எதிர்ப்பது விநோதமாக உள்ளது. மதமாற்ற விவகாரத்தை பூதாகரமாக்கி மக்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.
மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொண்டு தவறுகளை திருத்தி கொள்ள தவறினால் காங்கிரஸ் அழிந்து விடும் சூழல் ஏற்படும். மக்களவை தேர்தலை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால் மாநிலங்களவையில் அந்த நிலை இல்லாததால் ஒரு சில மசோதாக்கள் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மக்களவையை போலவே மாநிலங்களவையிலும் பாஜக பெரும்பான்மை பெறும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 40 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியால் 6 மாதங்கள் கூட எதிர்க்கட்சி வரிசையில் இருக்க முடியவில்லை. காங்கிரஸ் தனது தவறுகளை திருத்தி கொள்ள தவறினால் அடுத்த 15 ஆண்டுகளுக்கும் மோடிதான் பிரதமராக இருப்பார். நல்லாட்சி வழங்குவதே மோடியின் தாரக மந்திரம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற மக்கள் நிதி, தூய்மை  இந்தியா போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து