முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் இமெயில் சேவைகளை பயன்படுத்த அரசுத் துறைகளுக்கு தடை

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - தனியார் இமெயில் சேவைகளை அலுவலக பணிகளுக்கு உபயோகப்படுத்த வேண்டாம் என்று அரசு துறைகள், அமைச்சர்களை மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
பிரபலமான சில தனியார் இமெயில் சேவைகளில் பகிரப்படும் முக்கிய தகவல்கள், ரகசியங்கள் வெளியே கசிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய, மாநில அரசு துறை அலுவலகங்கள், அமைச்சர்களுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் அண்மையில் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பி உள்ளது.
அதில், உள்நாட்டு நிறுவனங்களின் இமெயில் சேவைகளையோ, தேசிய தகவல் மையம் சார்பில் உருவாக்கப்பட்ட இமெயில் சேவைகளையோ பயன்படுத்தும் போது அதில் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். மேலும் சில முக்கிய தகவல்கள்  அழிந்து விட்டாலும் கூட உள்நாட்டு சேவையில் அதை மீட்டெடுக்க முடியும். ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களின் இமெயில் சேவையில் பகிரப்படும் முக்கிய தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. அவை நமது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே அலுவலக பயன்பாடுகளுக்கு உள்நாட்டு சேவைகள் அல்லது தேசிய தகவல் மையம் சார்பில் உருவாக்கப்பட்ட இமெயில் சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து