முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோட்சே திரைப்படத்துக்கு தடை கோரி வழக்கு

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

மும்பை - மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸே பற்றிய திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி மகராஷ்டிர மாநிலம் புனே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹேமந்த் பாட்டீல் என்ற சமூக ஆர்வலர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ்.எஸ். நாயர் விசாரணையை ஒத்திவைத்தார். இது குறித்து மனுதாரரின் வழக்கறிஞர் வாஜித்கான் கூறுகையில்,
தேச பக்தர் நாதுராம் கோட்ஸே என்ற பெயரில் திரைப்படத்தை தயாரித்துள்ள அகில பாரதீய இந்து மகாசபை, அத்திரைப்படத்தை காந்தியை கோட்ஸே சுட்டுக் கொன்ற நாளான ஜனவரி 30ம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்துக்களுக்கு எதிராக காந்தி செயல்பட்டதால் திரைப்படத்தில் தேசபக்தராக கோட்ஸே சித்தரிக்கப்பட்டுள்ளார் என்று இந்து மகாசபையின் பொதுச் செயலாளர் முன்னா குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இத்திரைப்படத்தால் வகுப்புவாத வன்முறைகள் நிகழாது. பொதுமக்களிடையே விரோதம் ஏற்படாது என்று கோர்ட்டை திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ள வைத்தால் தவிர அதுவரை திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார் வாஜித்கான்.
இதனிடையே உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் கோட்ஸேவுக்கு கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து அது குறித்து விசாரணை நடத்துவதற்கு மாவட்ட கலெக்டர் நவநீத்சிங் சாஹல் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து