முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமீர்கானின் பிகே படத்தை திரையிட தடையில்லை

புதன்கிழமை, 31 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

மும்பை - அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பிகே திரைப்படத்தை மகாராஷ்டிர மாநில திரையரங்குகளில் தொடர்ந்து திரையிட எவ்வித தடையும் இல்லை என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
 
பிகே படத்தில், இந்து மத கடவுளை விமர்சித்து காட்சிகள் இருப்பதாகக் கூறி அப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவில் இந்து அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதனையடுத்து, பிகே படம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மகாராஷ்டிரா உள்துறை ராம் ஷிண்டே தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், பிகே திரைப்படம் மீதான விசாரணையை ரத்து செய்துள்ள முதல்வர் பட்நவிஸ், படம் குறித்து விசாரணை நடத்த தேவையில்லை. படத்தை தொடர்ந்து திரையிட எவ்வித தடையும் இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில், பிகே படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு தயாராக இருக்கிறது என கூறியுள்ளார்.
 
பிகே படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி, யாரது மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இப்படம் எடுக்கப்படவில்லை. மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் மூடநம்பிக்கைகளை மட்டுமே படம் சாடுகிறது என விளக்கமளித்திருந்தார். இதற்கிடையில் சென்சார் வாரியத் தலைவர் லீலா சாம்சனும் பிகே படத்திலிருந்து எந்த ஒரு காட்சியையும் நீக்கும் பேச்சுக்கே வாய்ப்பில்லை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து