முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலசந்தர் குடும்பத்தாருடன் கமல்ஹாசன் சந்திப்பு

புதன்கிழமை, 31 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை -  தமிழ்ப்பட உலகில், ‘இயக்குனர் சிகரம்’ என்ற பட்டத்துடன் 100-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்து மிகப்பெரிய சாதனைகளை செய்தவர் கே.பாலசந்தர்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 23 ந்தேதி  மரணம் அடைந்தார்.அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,மற்றும் நடிகர் நடிககள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
 கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.  பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் கே.பாலசந்தரின் உடல் தகனம் நடந்தது. ரஜினிகாந்த், பெசன்ட் நகர் மயானம் வரை சென்று தன் குருவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
உத்தம வில்லன்’ பட வேலைகளுக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்ததால், பாலசந்தரின் இறுதிச்சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

பாலசந்தரின் இறுதி அஞ்சலிக்குக் கூட வர முடியாத படி அவர் கற்றுக் கொடுத்த சினிமா வேலைகளில் ஈடுபட்டிருப்பதே அவருக்கு தான் செலுத்தும் இறுதி அஞ்சலி தான் என கமல் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

தற்போது அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ள கமல்ஹாசன் அவர் நேற்று காலை மயிலாப்பூரில் உள்ள பாலசந்தர் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு பாலசந்தர் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். அவர் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலியும் செலுத்தினார்.

பின்னர் அவர்  கூறும் போது;

கே.பாலசந்தரின் திறமைகளை அவரது பிரதிநிதிகளாக வெளிப்படுத்துவோம் மேலும் முதல் படத்தின்போது எப்படி வந்தேனோ அதை போலவே அவர் வீட்டுக்கு வந்துள்ளேன் என கூறியுள்ளார். தன் தந்தையுடன் இருந்ததை விட கே.பி.யுடன் அதிக நாள் இருந்ததாகவும் கமல் உருக்கமாக தெரிவித்துள்ளார். பாலசந்தர் இழப்பை ஈடுசெய்ய முடியாது மேலும் ஈடுசெய்யும் முயற்சியில் ஈடுபட மாட்டோம் என  தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து