முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் தரிசனம் நிறுத்தப்பட்டதால் தர்ணா போராட்டம்

வியாழக்கிழமை, 1 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் நேற்று குவிந்தனர்.

ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டுக்கு ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். இம்முறை வைகுண்ட ஏகாதசியும் சேர்ந்து வந்ததால் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக பக்தர்கள் திரண்டு வந்துள்ளனர்.நேற்று அதிகாலை முதலே திருமலையில் பக்தர்கள் குவிய தொடங்கினர்.

தேவஸ்தான நிர்வாகம் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை முதலே அனைத்து ஆர்ஜித சேவைகளை யும், சிறப்பு தரிசனங்களையும் ரத்து செய்தது. இருப்பினும் சர்வ தரிசனத்துக்கு 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசித்தனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்த தால் நேற்று காலையில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டது. இதனால் பல மணி நேரம்காத் திருந்த பக்தர்கள், டி.பி.சி. விடுதி பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதையடுத்து, போலீஸார் தலையிட்டு பக்தர் களை சமாதானம் செய்தனர். ஆயினும் பக்தர்கள் சமாதானம் அடையவில்லை. பின்னர் தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு ஆகியோர் நேரில் வந்து, விரைவில் தரிசனத் துக்கு அனுமதிக்கப்படுவர் என உறுதி அளித்ததால் பக்தர்கள் சமாதானம் அடைந்தனர்.
 
வைகுண்ட ஏகாதசியை முன் னிட்டு நேற்று அதிகாலை 1.30 மணியிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர். முதலில் மடாதிபதி கள், உச்ச நீதிமன்ற, மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளின் குடும்பத்தினர், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கோயில் முகப்பு கோபுரம் வழியாகஅனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வைகுண்டம் காம்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சர்வதரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து