முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருட்டு டிவிடி விற்பவர்களுக்கு இயக்குனர் சேரன் அழைப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

சேலம் - தனது சிடிடூ ஹோம் நிறுவனம் மூலம் ஒரிஜினல் டிவிடி விற்பனை செய்யலாம் என திருட்டு டிவிடி விற்பனை செய்பவர்களுக்கு நடிகரும், இயக்குனருமான சேரம் அழைப்பு விடுத்துள்ளார்.

நடிகரும்,இயக்குனருமான சேரன் சிடி டூ ஹோம் என்ற டிவிடி மூலம் சினிமாவை வீடுகளுக்கு கொண்டு செல்லும் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் தியேட்டரில் படம் ரிலீசாகும் அன்றே அந்த படத்தின் ஒரிஜனல் டிவிடிகளை வீடுகளுக்கு விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளார். இதற்கு தமிழகம் முழுவதும் ஸ்டாகிஸ்டுகள் மற்றும் டீலர்களை நியமித்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் வெளியிடபடும் படங்களின் டிவிடிகளை வீடுகளுக்கு எப்படி விநியோகம் செய்வது,பொதுமக்களை எப்படி? அணுகுவது என்பது குறித்து ஸ்டாகிஸ்டுகள் மற்றும் டீலர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்,நாமக்கல்,தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட டீலர்களுக்கு சேலம் விநாயகா மிஷன் ஹைடெக் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள அன்னஞீர்ணா ஆடிட்டோரியத்தில் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகரும்,இயக்குனருமான சேரன் நேற்று காலை சேலம் வந்தார்.பின்னர் காலை 10.30.மணிக்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து தனது சிடூ ஹெச் நிறுவனம் சார்பில் வரும் பொங்கல் பண்டியை அன்று ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படம் டிவிடி வெளியாகிறது.

அந்த படத்தின் டிவிடியை திருட்டு தனமாக யாரேனும் விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகோள் விடுத்து மனு ஒன்றை கொடுத்தார். அதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலை சந்தித்தும் மனு கொடுத்தார். பின்னர் மதியம் 2 மணியளவில்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது. சிடிடூ ஹோம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளேன். இந்த நிறுவனம் மூலம் திரைப்படங்களை டிவிடியில் வீடுகளுக்கு டோர் பை டோராக விநியோகம் செய்ய உள்ளோம். இந்த நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் 157 ஸ்டாகிஸ்டுகளும்,5000 டீலர்களும் இணைந்துள்ளனர். டிவிடிகளை பொதுமக்களுக்கு எப்படி விநியோகம் செய்வது, பொதுமக்களை எப்படி? அணுகுவது, என்ற பயிற்சி கோவை மற்றும் சேலத்தில் நடைபெறுகிறது.

 அதில் பங்கேற்க வந்துள்ளேன்.வரும் பொங்கலுக்கு ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படம் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து 5 படங்கள் வெளியிட தயாராக உள்ளது.படம் தியேட்டரில் வெளியாகும் அன்றே டிவிடியிலும் வெளியாகும்.மற்ற படங்களையும் நாங்கள் முறையாக அனுமதி பெற்று டிவிடியாக வெளியிடுவோம்.மினிமம் ஒரு டிவிடி விலை ரூ.50 க்கு ஒரிஜனலாக வழங்குகிறோம்.பெரிய படங்களின் விலை ரூ.100 அல்லது ரூ.75 என படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ப விலை மாறும்.குறைந்தது  ஒரு படத்திற்கு 25 லட்சம் டிவிடி இலக்காக வைத்துள்ளோம்.படத்திற்கு படம் இந்த எண்ணிக்கை உயரும், திருட்டு டிவிடி விற்பவர்கள் கூட இதில் இணைந்து ஒரிஜினல் டிவிடிகளை விற்பனை செய்யலாம்.

இந்த முயற்சிக்கு திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.தியேட்டர்களுக்கு பாதிப்பு இருக்குமா? என்கிறார்கள் நிச்சயம் பாதிப்பு இருக்காது.தியேட்டர்களிலும் படங்களை வெளியிடுவோம்.தியேட்டரில் படம் பார்க்க விரும்புபவர்கள் தியேட்டரிலும்,வீட்டில் பார்க்க விரும்புபவர்கள் வீட்டில் டிவிடியிலும் பார்க்கலாம். வெளி மாநிலத்தில் வசிப்பவர்கள் டிடிஹெச்சிலும், வெளிநாட்டில் வாழ்பவர்கள் நெட்டிலும் பார்க்கலாம் அதற்கு தனி கட்டணம். லிங்கா படம் ரிலீஸ் அன்றே டிவிடி வந்துவிட்டது,வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வந்தபோது அன்றே டிவிடி வந்துவிட்டது ஆனால் தியேட்டர்களுக்கு லாஸ் ஏதும் இல்லை.ஆனால் எந்த முதலும் போடாமல் திருட்டு டிவிடிகாரர்கள் சந்தை கட்டி வியாபாரம் செய்கின்றனர்.

சில பெரிய நடிகர்கள் பணக்காரர்களாக இருப்பதால் சினிமா காரர்கள் பணக்காரர்கள் அவர்களுக்கு நிறைய பணம் வருகிறது என்ற நினைப்பில் மக்கள் திருட்டு டிவிடியை வாங்கி பார்க்கின்றனர். திரைக்கு பின்னால் தயாரிப்பாளர்,ஏராளமான குடும்பங்கள் அதை நம்பி உள்ளனர் என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம். கடந்த ஆண்டு 200 தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணம் கிடைக்கவில்லை அவர்கள் சினிமாவே வேண்டாம் என்று சென்றுவிட்டனர். ஒவ்வொரு மனிதனும் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக உழைக்கிறான் ஓடுகிறான்.நான் என்னை பாதுகாக்க இந்த முயற்சியில் இறங்கியுள்ளேன். இந்த முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து