முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணிக்கு ஆக விதிமுறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அதிகாலை 3.0 5 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 3.10 மணி முதல் வைகுண்டம் அறைகளில் காத்திருந்த பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.  ஏகாதசியை தொடர்ந்து துவாதசியான நேற்றும் பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று நள்ளிரவு 12 மணி வரை வைகுண்டவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. வைகுண்ட துவாதசியையொட்டி நேற்று அதிகாலை 5 மணியளவில் ஏழுமலையான் கோயிலில் இருந்து ஜீயர்கள் முன்னிலையில் சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக வராக சுவாமி கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் அபிஷேகம், சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து ஏழுமலையான் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து