முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமீர்கானின் பீ கே திரைப்படம் ரூ.276 கோடி வசூல்

சனிக்கிழமை, 3 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

புது டெல்லி - அமீர் கான் நடித்துள்ள பீகே திரைப்படம் இரண்டு வாரங்களில் ரூ. 276 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
 
தூம் 3, சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய திரைப்படங்களின் ஒட்டு மொத்த வசூல் அளவை பீகே தாண்டிவிட்டது. தூம் 3 திரைப் படத்துக்கு ரூ. 265 கோடியும், சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத் துக்கு ரூ. 258 கோடியும் உள்ளூர் சந்தையில் வசூலானது. தூம் 3 திரைப்படம் உலக அளவில் மொத்த வருவாய் திரட்டியதில் முதலி டத்தில் இருந்தாலும் அந்த சாத னையை பிகே வெகுவிரைவில் முறியடித்துவிடும்

பீகே படம் இந்துமதத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி இந்துத்வா அமைப்பினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். பீகே படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பு போராட்டங்களை நடத்தினர். எனினும் உபியில் இந்த படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து