முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவன் கல்யாண் பட விழாவில் கத்திக்குத்து

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

ஐதராபாத் - தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவரது ரசிகர் மன்ற உறுப்பினருக்கு கத்திக் குத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தெலுங்கு பட நடிகர் பவன் கல்யாணின் புதிய திரைப்படமான 'கோபாலா கோபாலா' படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் கலந்துகொள்ள அவரது ரசிகர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. விழா நடந்த அரங்கில் நுழைய அவரது ரசிகர்மன்ற உறுப்பினர்கள் நுழைவு சீட்டுகளை விநியோகித்தனர். அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர், அவரது நண்பர்கள் சிலருக்கும் அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்ததால் அங்கு மோதல் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த அடையாளம் தெரியாத ரசிகர், நுழைவு சீட்டுகளை விநியோகித்த ஸ்ரீனிவாஸ் என்ற உறுப்பினரை கத்தி போன்ற ஆயுதத்தால் கழுத்தில் அறுத்ததாக மாதாப்பூர் காவல் நிலைய கண்காணிப்பாளர் கே. நரசிம்மலு தெரிவித்தார். காயமடைந்த ஸ்ரீனிவாஸ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து