முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகரவிளக்கு: ஐயப்பனுக்கு 2 முறை திருவாபரணங்கள் அணிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் வருகிற 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவது ஐதீகம். இதையொட்டி மகர விளக்கு பூஜையில் பங்கேற்று மகர ஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மகரவிளக்கு பூ ஜைக்கு சில நாட்களே இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். இதனால் பல மணி நேரம் காத்திருந்த பிறகே சுவாமி தரிசனம் செய்ய முடிகிறது. மகர விளக்கு பூஜையின் போது சுவாமி ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு விசேஷ பூ ஜை நடத்தப்படும். மேலும் இதே போல சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் நடைபெறும் மகர சங்கரம சந்தியா பூ ஜையின் போதும் சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

இந்த ஆண்டு மகர விளக்கு பூ ஜையும், மகர சங்கரம சந்தியா பூஜையும் வருகிற 14ம் தேதி ஒரே நாளில் நடைபெறுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாறு ஒரே நாளில் இந்த பூஜைகள் நடைபெறுகிறது. மகர விளக்கு பூஜையையொட்டி அன்று மாலை 6.30 மணிக்கு சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். இரவு 7.15 மணி வரை சுவாமி ஐயப்பனை திருவாபரண கோலத்தில்  பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதன் பிறகு திருவாபரணங்கள் கழற்றப்பட்டு மீண்டும் 7.30 மணிக்கு மகர சங்கரம சந்தியா பூஜையையொட்டி மீண்டும் சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜை நடத்தப்படும்.

இந்த பூஜை முடிந்த பிறகு கபடியார் அரண்மனையில் இருந்து எடுத்து வரப்படும் நெய் மூலம் சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும். மகர விளக்கு பூஜையையொட்டி ஐயப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் பற்றி கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தேவசம்போர்டு மந்திரி சிவகுமார் ஆகியோர் பத்தனம் திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, மகர விளக்கு பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. பம்பையிலும் சன்னிதானத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகர விளக்கு பூஜை முடிந்து ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக சபரிமலையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 650 பஸ்களும், கேரளாவிற்கு 350 பஸ்களும் இயக்கப்படவுள்ளது என்று அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து