முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை: மே.இ.தீவுகள், ஆஸ்தி., அணிகள் அறிவிப்பு

திங்கட்கிழமை, 12 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

சிட்னி - ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
வரும் பிப்ரவரி 14-ம் தேதி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வரு கின்றன. இந்திய அணி விவரம் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜேசன் ஹோல்டர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மார்லன் சாமுவேல்ஸ், சுலைமான் பென், டேரன் பிராவோ, ஜோனதன் கார்ட்டர், செல்டன் காட்ரெல், கிறிஸ்கெய்ல், தினேஷ் ராம்தின், கெமர் ரோச், ஆந்ரே ரஸ்ஸல், டேரன் சமி, லெண்டில் சிம்மன்ஸ், டிவைன் ஸ்மித், ஜெரோம் டெய்லர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
 
ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்துள்ள மைக்கேல் கிளர்க்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜார்ஜ் பெய்லி, பாட் கம்மின்ஸ், சேவியர் டோஹர்ட்டி, ஆரோன் பிஞ்ச், பிராட் ஹாடின், ஜோஸ் ஹேஸில்வுட், மிட்செல் ஜான்சன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து