முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியை குறைவாக எடை போடவேண்டாம்: ஹஸ்ஸி

செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

சிட்னி - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் குறைவாக எடைபோட வேண்டாம் என்று மற்ற அணிகளை மைக் ஹஸ்ஸி எச்சரித்துள்ளார்.

அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை போட்டிகளின் போது இந்திய அணி தங்கள் சாம்பியன் தகுதியை தக்க வைக்க கடுமையாக விளையாடும் என்பதை மறந்து விட வேண்டாம் என்று கூறுகிறார் ஹஸ்ஸி.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

இந்திய அணிக்கு உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் 2 மாதங்களாக விளையாடி வருகின்றனர். இப்போது அவர்கள் இங்குள்ள பல்வேறு சூழ்நிலைகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருப்பார்கள். அதாவது பிட்ச்களின் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு அந்த அணி தயாராக இருக்கும். மேலும், இங்கிலாந்து, ஆஸி.யுடன் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது இந்திய அணி. எனவே உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக அவர்கள் இங்கு நல்ல பயிற்சியில் இருப்பார்கள். ஆகவே டெஸ்ட் போட்டி முடிவுகளை வைத்து இந்திய அணியை குறைவாக எடைபோட வேண்டாம்.
 
0-2 என்ற முடிவை வைத்து நாம் அதிகம் பேச முடியாது. டெஸ்ட் தொடர்களில் அந்த அணி போராடியே தோற்றது என்பது ஒருபுறமிருக்க ஒருநாள் போட்டிகளில் அந்த அணி முற்றிலும் வித்தியாசமான அணி என்பதை மறந்து விட வேண்டாம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து