முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - விண்வெளி ஆராய்ச்சி துறை செயலாளராகவும், இஸ்ரோ நிறுவன புதிய தலைவராகவும் ஏ.எஸ். கிரண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கிரண்குமாரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. அவரது பதவி காலம் 3 ஆண்டுகளாகும். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கிரண்குமார், இஸ்ரோவில் 1975ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இஸ்ரோவின் முக்கிய சாதனை திட்டங்களான சந்திராயன், செவ்வாய் கிரக ஆராய்ச்சி ஆகியவற்றில் அவர் முக்கிய பங்காற்றி உள்ளார். இஸ்ரோவில் இருக்கும் அதிகாரிகளில் பதவி மூப்பின் அடிப்படையில் அதன் தலைவராக கிரண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து