முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான் வேட்டை வழக்கில் சல்மான் கானுக்கு பின்னடைவு

புதன்கிழமை, 14 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

புது டெல்லி - இந்தி நடிகர் சல்மான் கான் மான் வேட்டையாடியதாகத் தொடரப்பட்ட வழக்கில், ராஜஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
 
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி முகோபதாய தலைமையிலான அமர்வு, வழக்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் புதிய அமர்வு மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. படப்படிப்பின்போது மான் வேட்டையாடியதாக சல்மான் கான் மீது ராஜஸ்தான் அரசு வழக்கு தொடர்ந்தது. அதில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
 
இதை எதிர்த்து ராஜ்ஸ்தான் ஐகோர்ட்டில் சல்மான் கான் மேல் முறையீடு செய்தார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் படப்பிடிப்புக்காக தான் பிரிட்டன் நாட்டுக்குச் செல்ல முடியாது என்றும், ஆகவே தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டார். அதைத் தொடர்ந்து அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. தற்போது அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ராஜஸ்தான் ஐகோர்ட்டு தடை உத்தரவை தள்ளுபடி செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து