முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாரியம்மன் தெப்ப உற்சவம் 3ம் தேதி நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - மதுரை மாரியம்மன் தெப்பம் உற்சவம் வரும் 3ம் தேதி விமர்சையாக நடைபெறவுள்ளதாக அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் நா. நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தை தெப்ப உற்சவம் வரும் 23ம் தேதி துவங்கி 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி 4 சித்திரை வீதிகளில் இரு வேளைகளிலும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வரும் 3ம் தேதி அதிகாலையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் சென்றடையும் வைபவம் நடைபெறும். அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

தெப்பம் சேவார்த்திகளால் வடம் பிடிக்கப்பட்டு காலையில் 2 முறையும், மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்திலும் எழுந்தருள்கின்றனர். மீண்டும் இரவு சுமார் 8 மணியளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து அருள்பாலிப்பர்.

வரும் 3ம் தேதி் அதிகாலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருந்து புறப்பாடாகி அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளம் சென்று தெப்ப உற்சவத்தை முடித்து இரவு திருக்கோயிலுக்கு வந்து சேரும் வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். இந்த திருநாட்களில் பக்தர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருவோரின் நலனுக்காக ஆயிரங்கால் மண்டபம் கலைக்கூடம் திறந்து வைக்கப்படும்.

உள்ளே வருபவர்கள் கிழக்கு ராஜகோபுரம் வாசல் வழியாக காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் அனுமதிக்கப்படுவர்.

இந்த உற்சவ நாட்களில் திருக்கோயில் சார்பாகவோ, தங்கரத உலா மற்றும் திருக்கல்யாணம் ஆகிய விசேஷங்கள் எதுவும் நடத்த இயலாது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் மற்றும் இணை ஆணையர் ஆகியோர் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து