முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புது விதிமுறைகள் உலக கோப்பையை விறுவிறுப்பாக்கும்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் வரும் உலகக் கோப்பையை சுவாரஸ்யமாக மாற்றும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது குறித்து டிராவிட் கூறியதாவது,

புதிய விதிமுறைகளின் கீழ் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படும். இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். மைதானங்கள் பெரிதாக இருக்கும் என்பதால் பவுண்டரி, சிக்ஸர் செல்வதும் எளிதல்ல. இந்த புதிய விதிமுறைகள் கேப்டன்களுக்கு சவாலாக இருக்கும். உதாரணத்துக்கு உள்வட்டத்துக்குள் ஐந்து பீல்டர்களை நிறுத்த வேண்டும் எனும் போது, பகுதி நேர பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது கடினம். எனவே பகுதி நேர பந்து வீச்சாளர்களை விட விரைவில் விக்கெட் வீழ்த்தவல்ல தேர்ந்த ஐந்து பந்து வீச்சாளர்களுடன்தான் இறங்க வேண்டும் என்று டிராவிட் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் கூறுகையில், புதிய விதிமுறைகள் ஆர்வத்தை தூண்டி உள்ளன. பவர் பிளே, உள்வட்டத்தில் ஐந்து வீரர்கள் மட்டுமே இருப்பது போன்றவை அதிக ரன்கள் குவிக்க உதவும். இரண்டு பகுதி நேர பந்து வீச்சாளர்களுடன் இறங்குவதை விட விக்கெட் வீழ்த்தவல்ல கூடுதல் பந்துவீச்சாளர்கள் தேவை என்றார். 

ஒரு இன்னிங்ஸ் முழுவதுமே உள்வட்டத்தில் ஐந்து பீல்டர்கள் நிறுத்தப்பட வேண்டும். முதல் பத்து ஓவர்களில் வட்டத்துக்கு வெளியே இரண்டு பீல்டர்கள் மட்டுமே இருக்க வேண்டும். பேட்டிங் பவர் பிளேயின் போது வட்டத்துக்கு வெளியே மூன்று பீல்டர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது உள்பட விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து